என் மலர்tooltip icon

    உலகம்

    புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்: உயிர் தப்பிய 142 பேர்
    X

    புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்: உயிர் தப்பிய 142 பேர்

    • இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு விமானம் புறப்பட்டது.
    • அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்தனர்.

    புக்காரெஸ்ட்:

    துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.

    பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்தனர்.

    இந்நிலையில், நடுவானில் சென்றபோது விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதில் 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    இதையடுத்து ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×