என் மலர்
உலகம்

மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து.. 3 இந்தியர்கள் உயிரிழப்பு - 5 பேர் மாயம்
- படகு கவிழ்ந்தபோது அதில் 14 இந்திய பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
- இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்-இல் உள்ள பெய்ரா துறைமுக பகுதியில் நேற்று, படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து ஏற்பட்டது.
இதில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 5 பேர் காணாமல் போனதாகவும் மொசாம்பிக் நாட்டில் செயல்படும் இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
கடற்கரைக்கு அருகில் கடலில் நங்கூரமிட்டிருந்த கொள்கலன் கப்பலுக்கு வழக்கம்போல் பணியாளர்களை படகில் ஏற்றிச் சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்தது. படகு கவிழ்ந்தபோது அதில் 14 இந்திய பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதவிவிட்டுள்ளது.






