என் மலர்

  செய்திகள்

  சீன அதிபர் ஜின்பிங்
  X
  சீன அதிபர் ஜின்பிங்

  போருக்கு தயாராகுங்கள்: வீரர்களுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போருக்கு தயாராக இருக்கும்படி சீன வீரர்களை (பி.எல்,ஏ) அதிபர் ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
  ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40-வது ஆண்டு நிறைவை நினைவையொட்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்திற்கு சென்றார். அங்கு இருந்த வீரர்களிடம் மனதையும் சக்தியையும் போருக்கு தயார்படுத்துங்கள் என அழைப்பு விடுத்துள்ளதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கோள் காட்டி ஆங்கில டி.வி.ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  கடந்த 12-ம்தேதி (திங்கட்கிழமை) இந்தியா சீனா இடையேயான பதற்றத்தை குறைக்கும் வகையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 13-ம் தேதி சீன அதிபர் இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தைவான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தைவான் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த விலக விரும்புகிறது. அமெரிக்கா தைவானுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, ஆயுதங்கள் வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. இதனை மனதில் வைத்துதான் ஜின்பிங் பேசியிருப்பார் என கருதப்படுகிறது.
  Next Story
  ×