என் மலர்
செய்திகள்

சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண் பதவி ஏற்றார்
சர்வதேச நிதியத்தின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். #GitaGopintah #ChiefEconomist
வாஷிங்டன்:
189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்.) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.
இந்த அமைப்பின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.
கடந்த 1-ந்தேதி சர்வதேச நிதியத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கீதா கோபிநாத், இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இதற்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்து வந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31-ந்தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் வசிக்கும் கீதா கோபிநாத் கர்நாடக மாநிலம் மைசூருவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் டி.வி.கோபிநாத்-விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர்கள். கீதா கோபிநாத் தற்போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. #GitaGopintah #ChiefEconomist

Next Story