search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால் பாதுகாப்பு பாதிக்கப்படாது: ஆப்கானிஸ்தான்
    X

    அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால் பாதுகாப்பு பாதிக்கப்படாது: ஆப்கானிஸ்தான்

    அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு பாதிக்கப்படாது என அதிபரின் தலைமை ஆலோசகர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் கூறியுள்ளனர். #USTroopWithdrawal #Afghanistan
    காபூல்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 7 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இதனிடையே ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் குழந்தைகள், பெண்கள் என பொதுமக்களில் லட்சக்கணக்கானோர் பலியாகி விட்டனர்.  இதற்கு ஐ.நா. அமைப்பும் கண்டனம் தெரிவித்து விட்டு நின்று விட்டது.

    அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் சிரியாவில் முகாமிட்டு தாக்குதலில் ஈடுபட்டு வந்தன.  இதனை தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்த பல நகரங்கள் மீட்கப்பட்டன.

    இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டதாக கூறி, அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்.

    சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது.

    இதுபற்றி வெளியாகியுள்ள செய்தியொன்றில், பெயர் வெளியிடாத அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறும்பொழுது, மோதல்களை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றிய வாய்ப்பினை அறிந்து கொள்ளும் முயற்சியில் டிரம்ப் உள்ளார் என கூறினார்.

    இதேபோன்று மற்றொரு செய்தியில், படைகளை வாபஸ் பெறும் முடிவு எடுக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியின் செய்தி தொடர்பு அதிகாரி ஹரூண் சக்கன்சூரி சமூக ஊடகத்தின் வழியே வெளியிட்டுள்ள செய்தியில், ‘எங்களது நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால் அதனால் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படாது. ஏனெனில் கடந்த நான்கரை வருடங்களாக முழு கட்டுப்பாட்டில் நாடு உள்ளது’ என அவர் கூறியுள்ளார்.

    இதேபோல் அதிபரின் தலைமை ஆலோசகரும், நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.  #USTroopWithdrawal #Afghanistan
    Next Story
    ×