என் மலர்
செய்திகள்

காபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் - 6 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள பள்ளியின் அருகே இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். #Kabulsuicideattack #Kabulattack
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களான ஹஸ்ரா பழங்குடியின மக்களுக்கு எதிராக நாளுக்கு நாள் சண்டை அதிகரித்து வருகிறது.
தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்தும், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு வலியுறுத்தியும் நேற்றிரவில் இருந்து மாணவர்களும், பொதுமக்களும் காபுல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் அதிகம் குவிந்திருந்த இஸ்திக்லால் பள்ளியின் அருகே தலிபான்களின் தற்கொலைப் படையை சேர்ந்த மனித வெடிகுண்டு இன்று நடத்திய தாக்குதலில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இருபதுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Kabulsuicideattack #Kabulattack
Next Story






