search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் பலி
    X

    மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் பலி

    மாலி நாட்டில் பிரான்ஸ் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியகியுள்ளது. #Frenchairstrike
    பாரிஸ் :

    ஆப்பிரிக்க நாடான மாலி பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தற்போது பல்வேறு பயங்கரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் அங்கு அட்டூழியம் செய்து வருகின்றனர். எனவே அவர்களை ஒடுக்கி மாலி நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க 4 ஆயிரம் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

    தென் மேற்கு கயோ மகாணத்தில் போல் சரே வனப்பகுதி உள்ளது. அங்கு பதுங்கியிருந்து கொண்டு பிரான்ஸ் ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இது புர்கினோ பாசோ நாட்டின் எல்லையில் உள்ளது.

    இந்நிலையில், பிரான்ஸ் ராணுவம் அப்பகுதியில் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், வான் தாக்குதல் நடத்திய பிறகு விமானத்தில் இருந்து தரையில் இறங்கிய பிரான்ஸ் கம்மாண்டோ வீரர்கள், கொல்லப்பட்டவன் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் முகமது அக் அல்மௌனர் என்பதை உறுதி செய்தனர்.

    இந்த தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு இளைஞர் உள்பட பொதுமக்கள் இருவர் பலியாகினர். பொதுமக்களின் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பிரான்ஸ் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Frenchairstrike
    Next Story
    ×