search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாம் குருஸ் படத்துக்காக போர் விமானம் தந்து உதவிய அபுதாபி
    X

    டாம் குருஸ் படத்துக்காக போர் விமானம் தந்து உதவிய அபுதாபி

    டாம் குருஸ் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் இம்பாசிபிள் படத்துக்காக 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அவர் குதிக்க அபுதாபி அரசு போர் விமானம் தந்து உதவிய தகவல் வெளியாகியுள்ளது. #AbuDhabiC17militaryplane #CruiseHALOjump
    அபுதாபி:

    சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’ படத்தில்   HALO jump (High Altitude, Low Opening) என்ற மெய்சிலிர்க்க வைக்கும் சாகச காட்சி திரையுலக வரலாற்றில் முதன்முறையாக படமாக்கப்பட்டுள்ளது.

    இந்த காட்சியை படம்பிடிக்கவும், ஒத்திகைக்காகவும் சுமார் மூன்று வாரங்களுக்கு அதிநவீன  C-17 போர் விமானம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், எந்த நாட்டு அரசும் சினிமா படப்பிடிப்புக்காக போர் விமானத்தை மூன்றுவார காலத்துக்கு முடக்கிப்போட முன்வராது என்ற கருத்து படப்பிடிப்பு குழுவினரிடையே நிலவியது.

    படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிர்வாகிகள் இதற்காக அபுதாபி அரசின் ஊடகத்துறை அமைச்சகத்தை அணுகியபோது இதற்கு சம்மதம் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’ படக்குழுவினர் ஒருமாத காலம் அபுதாபியில் முகாமிட்டு போர் விமானத்தில் இருந்து கீழே குதிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தனர். 

    கதாநாயகன் டாம் குருஸ் அங்கு வந்து சேர்ந்த பின்னர் 12 நாட்களில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக, 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து 200 மைல் வேகத்தில் வீசிய காற்றை கிழித்துகொண்டு 94 முறை டாம் குருஸ் கீழே குதித்துள்ளார்.

    படமாக்கப்பட்ட இந்த காட்சிகளில் சிறப்பாக அமைந்தவற்றை மட்டும் தேர்வு செய்து, எடிட்டிங் முறையில் படத்தில் இணைத்து அசத்தியுள்ளனர்.

    இந்த காட்சிக்கு தேவையான போர் விமானம் மட்டுமல்லாமல், ஒத்திகையின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் உடனிருந்து படக்குழுவினருக்கு வேறு சில பயிற்சிகளையும் அளித்தனர். #AbuDhabiC17militaryplane #CruiseHALOjump
    Next Story
    ×