search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெறும்
    X

    இந்தியா - அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெறும்

    அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. #US #India #2plus2dialogue
    வாஷிங்டன் :

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை அமெரிக்காவுக்கு சென்றபோது இரு நாடுகள் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 6-ம் தேதி இந்தியா - அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

    அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கெல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டது.

    பாதுகாப்புத்துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது, உலகளாவிய மற்றும் பிராந்திய நிலவரம் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த சந்திப்பை அமெரிக்கா ஒத்திவைப்பதாக காரணம் ஏதும் கூறாமல் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹீதர் நௌவேர்ட் இன்று அறிவித்துள்ளார். 
    #US #India #2plus2dialogue
    Next Story
    ×