search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து அரையிறுதியை காணவரும் பிரான்ஸ் அதிபர் முடிவுக்கு ரஷியா வரவேற்பு
    X

    உலக கோப்பை கால்பந்து அரையிறுதியை காணவரும் பிரான்ஸ் அதிபர் முடிவுக்கு ரஷியா வரவேற்பு

    உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸ் விளையாடினால், அந்த போட்டியை காண ரஷியாவுக்கு வருவேன் எனக்கூறிய பிரான்ஸ் அதிபர் மெக்ரான் முடிவை ரஷியா வரவேற்றுள்ளது. #WorldCup2018 #URUFRA #EmmanuelMacron
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் முதல் காலிறுதி போட்டி நேற்று ரஷியாவில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகள் மோதின.

    கிரிஸ்மான் உதவியால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

    இதற்கிடையே, உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி விளையாடும் பட்சத்தில் போட்டியை காணரஷியாவுக்கு வருவேன் என பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.   

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் முடிவை வரவேற்பதாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் கூறுகையில், உலக கோப்பை போட்டியை காண வரும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் முடிவை ரஷியா வரவேற்கிறது என தெரிவித்துள்ளார். #WorldCup2018 #URUFRA #EmmanuelMacron
    Next Story
    ×