என் மலர்
செய்திகள்

இந்தோனேசியாவில் கரும்புகையை கக்கிய எரிமலை - அச்சத்தில் ஓடிய சுற்றுலா பயணிகள்
இந்தோனிசியாவில் எரிமலை ஒன்றில் இருந்து திடீரென புகையை வெளியேறியதால், அந்த பகுதியில் இருந்த சுற்றுலாப்பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். #Volcanoeruption #IndonesiaVolcano
ஜகார்த்தா:
இந்தோனிசியா நாட்டில் உள்ள யோகியகர்டா மற்றும் மத்திய ஜாவா பகுதிகளில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இங்குள்ள எரிமலைகள் புகையை வெளிப்படுத்தி பல ஆண்டுகள் கடந்ததால், தற்போது இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மெராபி என்ற மலையில் அமைந்துள்ள எரிமலை ஒன்று திடீரென்று புகையைக் கக்கியது. வெளிவந்த புகையால் வானம் கருப்பாக மாற, இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

கூட்டத்திலிருந்த ஒருவர் அந்த எரிமலை புகையை தனது செல்போனில் படம் பிடித்தார். இந்த சம்பவத்தால், மத்திய ஜாவா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தோனேசியாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் 347 பேர் உயிரிழந்ததோடு, 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Volcanoeruption #IndonesiaVolcano
Next Story






