என் மலர்

  செய்திகள்

  8GB ரேம் கொண்ட சியோமி Mi பேட் 3 விரைவில் வெளியாகலாம்
  X

  8GB ரேம் கொண்ட சியோமி Mi பேட் 3 விரைவில் வெளியாகலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சியோமி நிறுவனத்தின் புதிய Mi பேட் 3 டேப்லெட் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் வெளியீட்டு தேதி உள்ளிட்ட தகவல்கள் கசிந்திருக்கின்றன.
  பீஜிங்:

  சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி புதிய Mi பேட் 3 டேப்லெட் சாதனத்தை இம்மாத இறுதியில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டேப்லெட் அதிக சக்திவாய்ந்த அம்சங்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

  சியோமி Mi பேட் 3 டேப்லெட் முதற்கட்டமாக சீனாவிலும் அதன் பின் மற்ற நாடுகளிலும் வெளியிடப்படும். சீனாவில் டிசம்பர் 30 ஆம் தேதி இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை சில நாட்களில் துவங்கும். முந்தைய டேப்லெட்களை விட புதிய Mi பேட் 3 டேப்லெட்டில் அதிகளவு மாற்றங்களை சியோமி வழங்கியிருக்கிறது. 

  Mi பேட் 3 டேப்லெட் 128GB விலை இந்திய மதிப்பில் ரூ.20,000 வரை இருக்கும் என்றும் 256GB விலை ரூ.22,500 வரை இருக்கும். இத்துடன் புதிய காந்த சக்தி கொண்ட கீபோர்டு ஒன்றையும் சியோமி அறிவித்திருக்கிறது. இதன் விலை ரூ.1000 என கூறப்படுகின்றது. 

  சியோமி Mi பேட் 3 டேப்லெட்டின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 9.7 இன்ச் 2048x1536 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 2.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் பிராசஸர் மற்றும் 8GB ரேம் வழங்கப்படும். மெமரியை பொருத்த வரை 128GB மற்றும் 256GB என இரண்டு வகை மெமரிக்களை கொண்டிருக்கலாம். 

  ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இங்குதளங்களில் கிடைக்கும் சியோமி Mi பேட் 3 டேப்லெட் முழுமையான மெட்டல் வடிவமைப்பு மற்றும் 8290 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். கேமராவை பொருத்த வரை 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×