search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழையா விருந்தாளியாக நான் எங்கும் சென்றதில்லை: விஜய் மல்லையா தன்னிலை விளக்கம்
    X

    அழையா விருந்தாளியாக நான் எங்கும் சென்றதில்லை: விஜய் மல்லையா தன்னிலை விளக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நகரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அழைப்பில்லாமல் கலந்துகொண்டதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் ’அழையா விருந்தாளியாக நான் எங்கும் சென்றதில்லை’ என அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
    லண்டன்:

    இந்தியாவில் உள்ள பிரபல வங்கிகளில் பெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்த முடியாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அவரது பாஸ்போர்ட் மற்றும் முக்கிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

    பண மோசடி வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக மும்பை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்றிருப்பதால் அவர் அங்கு சுதந்திரமாக சுற்றி வருகிறார்.

    இந்நிலையில், சுஹெல் சேத் மற்றும் பத்திரிகை நிருபர் சன்னி சென் ஆகியோரின் நூல் வெளியீட்டு விழா லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ் பள்ளியின் சார்பில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பிதழ் பட்டியலில் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெறாத நிலையில் அவர் அழையா விருந்தாளியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் உபரி தகவல்கள் உலா வந்தன.

    நிகழ்ச்சி தொடங்கியதும் மல்லையா தனது மகளுடன் வந்து அரங்கில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். அவரைப் பார்த்த இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா, சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறியதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக விஜய் மல்லையா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அழையா விருந்தாளியாக நான் எங்கும் சென்றதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த நிகழ்ச்சியில் வெளியான புத்தகத்தை எழுதியவர் எனது நண்பர். அதனால், அந்த விழாவுக்கு நான் என் மகளுடன் சென்று அமர்ந்திருந்தேன். இதைதொடர்ந்து, என்னைப்பற்றிய தலைப்புச் செய்திகளும், யூகங்களும் நடமாட தொடங்கியுள்ளன. நான் எப்போதும் எங்கும் அழையா விருந்தாளியாக சென்றதில்லை. செல்லவும் மாட்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புத்தக விழாவை நடத்திய விழா ஏற்பாட்டாளர்களான ’லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்’ என்ற பொருளாதாரப் பள்ளி எங்களது அழைப்பாளர்கள் பட்டியலில் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெறவில்லை என இந்திய வெளியுறவுத்துறைக்கு விளக்கம் அளித்துள்ளது.

    எனினும், இந்த புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக பரவலாக விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால் இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் தங்களது பெயர்களை கட்டாயமாக முன்பதிவு செய்துகொள்ள தேவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×