என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த காற்று வீசியதால் பலூனில் பறந்த 9 பேர் படகில் குதித்து தப்பினர்
    X

    பலத்த காற்று வீசியதால் பலூனில் பறந்த 9 பேர் படகில் குதித்து தப்பினர்

    ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகேயுள்ள மார்னிங்டன் தீபகற்ப பகுதியில், நடுக் கடலில் பலூனில் பயணித்த 9 பேர் கொண்ட குழு விபத்தில் இருந்து மீட்கப்பட்டனர்
    மெல்போர்ன் :

    ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகேயுள்ள மார்னிங்டன் தீபகற்ப பகுதியில் 9 பேர் கொண்ட குழு ஒரு பலூனில் பறந்து கொண்டிருந்தனர். அந்த பலூன் கடல் மீது பறந்து கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியது. அதனால் அந்த பலூன் நிலை தடுமாறியது.

    இதனால் பலூன் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்பவர்கள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது. இதற்கிடையே கடலில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அதைப்பார்த்த பலூன் விமானி படகு ஓட்டுனருக்கு தகவல் கொடுத்தார். எனவே பலூன் பறந்த பகுதிக்கு படகு கொண்டு வரப்பட்டது.

    அதைதொடர்ந்து பலூனில் பறந்த 9 பேரும் படகில் இருந்தவர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு உயிர்தப்பினர்.
    Next Story
    ×