search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உங்களை எந்நேரமும் உளவு பார்க்கும் ஸ்மார்ட் சாதனங்கள்: தடுப்பது எப்படி?
    X

    உங்களை எந்நேரமும் உளவு பார்க்கும் ஸ்மார்ட் சாதனங்கள்: தடுப்பது எப்படி?

    இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் சாதனங்கள் நம்மை உளவு பார்க்க துவங்கியுள்ளது. ஸ்மார்ட் சாதனங்கள் உங்களை உளவு பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    நம் வீடுகளில் இருக்கும் வீட்டு உபயோக பொருட்கள் இண்டர்நெட் வசதியுடன் நமது ஸ்மார்ட்போன்களில் இயக்கக் கூடிய வசதிதகளை பெற்றுவிட்டது. இவ்வாறான வசதிகள் நமக்கு பலன் அளித்தாலும், சில சமயங்களில் ஆபத்தான ஒன்றாகவும் மாறி விடுகிறது. 

    இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் ஹேக்கர்களை அதிகம் கவர்ந்து விடுவதால் நமது தகவல்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி விடுகிறது. சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் எவ்வித சாதனமும் உளவு பார்க்கும் என்பதை நமக்கு தெரியப்படுத்தியது. 

    ஸ்மார்ட் டிவி முதல் மைக்ரோவேவ் அடுப்பு வரை எதையும் ஹேக் செய்து, யாரை வேண்டுமானாலும் உளவு பார்க்கலாம் என கூறப்பட்டது. இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் சாதனங்கள் ரகசியமாக நம்மை உளவு பார்த்து தகவல்களை சாதனத்தை தயாரிப்பவருக்கே வழங்குகின்றன என்ற தகவல்கள் வெளியானது. 

    இந்நிலையில் எவ்வித ஸ்மார்ட் சாதனமும் உங்களை உளவு பார்க்காமல் இருக்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்..,

    கடினமான பாஸ்வேர்டு:



    கடினமான கடவுச்சொல் (பாஸ்வேர்டு) பயன்படுத்த வேண்டும், இதோடு அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது யாராலும் உங்களது சாதனத்தை ஹேக் செய்யவோ, தரவுகளை திருடவோ முடியாது. 

    பெரும்பாலும் வார்த்தைகள் (text) , எண் (numbers) மற்றும் சிறப்பு குறியீடு (special characters) உள்ளிட்டவை கொண்ட கடவுச்சொல் பயன்படுத்த வேண்டும். கடினமான கடவுச்சொல் செட் செய்த பின் அவற்றை நினைவில் வைத்து கொள்ள முடியாது எனில் அவற்றை தனிப்பிட்ட குறியேட்டில் குறித்து வைத்து கொள்ளலாம். 

    ஸ்மார்ட்போனில் கடவுச்சொல் பதிவு செய்ய பல்வேறு பிரத்தியேக செயலிகள் கிடைக்கின்றன. அதிக டவுன்லோடு மற்றும் நல்ல ரீவியூ வழங்கப்பட்டுள்ள செயலிகளை பயன்படுத்தலாம். 
     
    வெப் கேமரா:



    உங்களது லேப்டாப் கேமராவினை துணியை கொண்டு மறைத்து வைக்கலாம். இவ்வாறு செய்வதால் ஹேக்கர் உங்களின் லேப்டாப்பை ஹேக் செய்ய முடியாது என்றில்லை. ஆனால் உங்களை தனிப்பட்ட முறையில் வீடியோக்களாக படமாக்காமல் தடுக்க முடியும். 

    உங்களது லேப்டாப் ஹேக் செய்யப்பட்டால் ஹேக்கர்களால் வெப்கேமராவினை உட்கார்ந்த இடத்தில் இருந்த படி இயக்க முடியும். இதனால் நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் லேப்டாப் வெப்கேமராவினை மறைத்து வைப்பது நல்லது.  

    லொகேஷன் செட்டிங்ஸ்:



    ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் செயலிகளில் தேவையானவற்றிற்கு மட்டும் லொகேஷன் இயக்க அனுமதி வழங்க வேண்டும். பெரும்பாலான செயலிகள் லொகேஷனினை இயக்க வேண்டிய அவசியம் இல்லாமலும் அதற்கான அனுமதியை கோரப்படும். 
        
    ஐபோனில் இந்த ஆப்ஷனை செயல்படுத்த  Settings -- Privacy -- Location Services செல்ல வேண்டும். இங்கு எந்தெந்த செயலிகள் லொகேஷனை இயக்குகின்றது என்பதை பார்த்து, தேவையான செயலிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம். 

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில்  Settings -- apps ஆப்ஷன் சென்று தேவையான செயலிகளுக்கு மட்டும் லொகேஷனை இயக்க அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ செய்யலாம்.  

    மென்பொருள் அப்டேட்:



    ஸ்மார்ட்போன், கணினி என அனைத்து சாதனங்களையும் மென்பொருள் சார்ந்து அப்டேட் செய்வது நல்லது. இதனால் சாதனத்தின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. எப்போதும் புதிய அப்டேட் கொண்ட மென்பொருள்களில் ஏற்கனவே இருக்கும் பிழை சரி செய்யப்பட்டிருக்கும் என்பதால் ஹேக்கர்களின் பணியை சிக்கலாக மாற்றும்.   

    அனைத்து சாதனங்களிலும் மென்பொருள்களை அப்டேட் செய்ய settings மெனு செல்ல வேண்டும். 

    ஸ்மார்ட் டிவி:



    சில ஸ்மார்ட் டிவிக்கள் நீங்கள் நினைப்பதை விட அதிகளவு தகவல்களை ரகசியமாக சேகரிக்கும். சமீபத்தில் வெளியான தகவல்களில் சில ஸ்மார்ட் டிவிக்கள், அவை வைக்கப்பட்டுள்ள அறையில் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டது. வாய்ஸ் கமாண்ட் வசதி கொண்ட டிவிக்களில் இது சாத்தியம் என்ற நிலையில் வாடிக்கையாளர்கள் இண்டர்நெட் இணைப்பை துண்டித்து தங்களது ரகசியங்களை காப்பாற்றி கொள்ளலாம். 

    ஸ்மார்ட் டிவியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டிப்பதால் டிவி சேகரிக்கும் தகவல்கள் ஹேக்கர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படாமல் தவிர்க்க முடியும். சில டிவிக்களில் குறிப்பிட்ட தரவு சேகரிக்கும் ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைக்க முடியும். 

    ஸ்மார்ட்போன் வாய்ஸ் ஆப்ஷன்:



    ஸ்மார்ட்போன்களில் செயல்படுத்தப்பட்டிருந்தால் வாய்ஸ் ரெகக்னீஷன் வசதிகளை ஆஃப் செய்து வைக்க வேண்டும். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராயாடு இயங்குதளங்கள் வழங்கும் வாய்ஸ் ரெகக்னீஷன் வசதி மூலம் குரலை கொண்டு போனின் சில அம்சங்களை இயக்க முடியும். 

    வாய்ஸ் ரெகக்னீஷன் வசதிகளை பயன்படுத்துவது ஆபத்தானதா என்பதை விட அவற்றை பயன்படுத்தும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    Next Story
    ×