என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
- இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என செனை்ன வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. காலை நேரங்களில் வெயிலாக இருந்தது.
காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி, சென்னை கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், பூவிருந்தவல்லி, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், முகப்பேர், ராமாபுரம், வானகரம், போரூர் ஆகிய இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.






