என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
    X
    LIVE

    Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    Live Updates

    • 20 Sept 2025 2:01 PM IST

      நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விஜய், "வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரையில் சுற்றுலா பகுதிகளை முன்னேற்றம் செய்யலாம், செய்தார்களா?நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம். மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா? நாகை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. நாகை பேருந்துநிலையத்தில் சுகாதாரம் இல்லை, ரயில்நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை வேதாரண்யம் உப்பு ஏற்றுமதியை வளர்த்தெடுக்கவில்லையே ஏன்?" என்று குற்றம் சாட்டினார். 

    • 20 Sept 2025 1:54 PM IST

      நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விஜய், "பாரம்பரிய கடல்சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டுவந்திருக்கலாம், மீன் தொடர்பான ஆலை அமைத்திருக்கலாம். சி.எம். சார் மனச தொட்டு சொல்லுங்க வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா? கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்காமல் சொந்த குடும்பத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்" என்று தெரிவித்தார். 

    • 20 Sept 2025 1:51 PM IST

      நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விஜய், "நாகப்பட்டினத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் சாட்சி என அடுக்குமொழியில் பேசுகின்றனர். நான் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல, எப்போதோ வந்துவிட்டேன். மக்கள் இயக்கமாக முன்வந்து நின்று குரல் கொடுத்தோம் தற்போது அரசியல் இயக்கமாக வந்து குரல் கொடுக்கிறோம். மீனவர்களின் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக திமுக கிடையாது இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்கள் என பிரித்து பார்க்க நாம் பாசிச பாஜகவும் கிடையாது" என்று தெரிவித்தார். 

    • 20 Sept 2025 1:46 PM IST

      நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விஜய், "மதவேறுபாடு இல்லாத மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நாகை மக்களுக்கு சிரம் தாழ்ந்த ஸ்பெஷல் வணக்கம். என்றும் மீனவர்களின் நண்பன் நான். மீன் ஏற்றுமதியில் 2வது இடம் வகிக்கும் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் எந்த வசதியுடம் செய்யப்பட்டவில்லை. மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நான் பேசியது குற்றமா? மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் சமயத்தில் நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பது கடமை" என்று தெரிவித்தார்.

    • 20 Sept 2025 1:41 PM IST

      நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் அண்ணா அவர்களுக்கு ஒரு வணக்கம், பெரியார் அவர்களுக்கு ஒரு வணக்கம் என உரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியுடன் உள்ள இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன். எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம்" என்று தெரிவித்தார்.

    • 20 Sept 2025 1:38 PM IST

      நாகப்பட்டினத்தில் எல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க என உரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய் 

    Next Story
    ×