என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live Updates
- 17 Feb 2026 10:53 AM IST
கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 17 Feb 2026 10:53 AM IST
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,317 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
- 17 Feb 2026 10:52 AM IST
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு.
- 17 Feb 2026 10:51 AM IST
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
- 17 Feb 2026 10:50 AM IST
ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 17 Feb 2026 10:49 AM IST
புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு நில எடுப்புப் பணிகளுக்கு அரசு நிர்வாகம் ஒப்புதல்
- 17 Feb 2026 10:48 AM IST
சென்னையில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.671 கோடியில் உயர்மட்ட சாலை பணிகள் நடைபெற்று வருகிறது- அமைச்சர்








