என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- 2.22 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
- இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுப்பதற்கான டோக்கன் வழங்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2.22 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






