பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "தீக்கொளுத்தி" நாளை வெளியீடு

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார்.
பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "தீக்கொளுத்தி" நாளை வெளியீடு
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "தீக்கொளுத்தி" நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com