என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் "சதம்"- மதுரையில் அதிகபட்சம்
- சென்னை மீனம்பாக்கத்தில் 101.84, திருச்சியில் 101.3 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
- கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாகப்பட்டினத்தில் 102.38 டிகிரி பாரன்ஹீட், தஞ்சாவூர் 102.2, சென்னை மீனம்பாக்கத்தில் 101.84, திருச்சியில் 101.3 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
கடலூர் மற்றும் மதுரை நகரம் பகுதியில் தலா 101.2, கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தாலும், காலை வேளையில் வெயில் சுட்டெரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






