தூத்துக்குடி துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தூத்துக்குடியில் இன்று 5-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

தூத்துக்குடி:

இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் டிட்வா புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. தொலைவில் நகர்ந்த நிலையில் தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com