என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    SIR: வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஜூஸ் கடை பெண் தொழிலாளி- ஆதாரத்துடன் அதிகாரியிடம் பா.ஜனதா புகார்
    X

    SIR: வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஜூஸ் கடை பெண் தொழிலாளி- ஆதாரத்துடன் அதிகாரியிடம் பா.ஜனதா புகார்

    • வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்த பணி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
    • தற்போது விண்ணம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியினை எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடிகள் தொடர்வதாக பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 87-வது வார்டில் வாக்குச்சாவடி அதிகாரியாக ஜூஸ் கடையில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளி நியமிக்கப்பட்டு இருப்பதாக பா.ஜனதா புகார் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜனதா மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனிடம் அளித்து உள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    வாக்களர்களுக்கு விண்ணப்பங்களை வழங்குவதற்காக பி.எல்.ஓ. (பூத் லெவல் ஆபிசர்ஸ்) அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பூத் எண் 87-க்கு பி.எல்.ஓ.வாக நியமிக்கப்பட்டவர் சுபாஷினி. இந்த பூத் அடங்கிய பகுதியில் விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை என வந்த புகாரையடுத்து சுபாஷினியை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, எனக்கு பல் வலி ஏற்பட்டதால் என் மகனை வைத்துதான் விண்ணப்பங்களை கொடுக்கச் சொன்னேன்.

    அவன்தான் கொடுத்தான். இது வரைக்கும் 50 பார்ம் கொடுத்திருப்பான். வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்றார். அவரிடம் மேலும் விசாரித்தபோது, ஒரு ஜூஸ் கடையில் வேலைப் பார்த்து வருவதாகவும் கொரோனா காலத்தில் இருந்தே மாநகராட்சியில் ஏதேனும் இப்படி வேலைன்னா கூப்பிடுவாங்க. போவேன். அதே மாதிரிதான் இப்போது இந்த வேலைக்கு கூப்பிட்டாங்க என்றும் கூறினார்.

    இப்படி ஜூஸ் கடையில வேலை பார்க்கிறவங்க, சத்துணவு ஆயாக்கள், கொசு மருந்து அடிப்பவர்கள் பலரையும் இந்த திருத்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த பணிகள் குறித்த எந்த அடிப்படை விவரமும் தெரியவில்லை.

    இப்படி இருந்தால், வாக்காளர் திருத்தப்பணிகள் எப்படி நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும்? அதனால் குளறுபடிகள் இல்லாமல், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நேர்மையாகவும் உண்மையாகவும் நடப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து, 100 சதவீதம் தவறில்லாத உண்மையான வாக்காளர் கள் பட்டியலை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×