என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்கள் பவனாக மாறிய ராஜ் பவன்... விஷ பாம்புக்கு கூட நல்ல பாம்பு என்றுதான் பெயர் - சண்முகம் விமர்சனம்
    X

    மக்கள் பவனாக மாறிய ராஜ் பவன்... விஷ பாம்புக்கு கூட நல்ல பாம்பு என்றுதான் பெயர் - சண்முகம் விமர்சனம்

    • ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கை வைத்தார்.
    • இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

    இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

    இதனையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த பெ.சண்முகம், "கொடிய விஷமுள்ள பாம்புக்குகூட நல்ல பாம்பு என்றுதான் பெயர். நல்ல பாம்பு என்று சொல்வதால் அதற்கு விஷமில்லை என்று அர்த்தம் இல்லை. ராஜ் பவனை மக்கள் பவன் என மாற்றியதால் அவர்கள் குணம் எல்லாம் மாறிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியாது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×