ஊட்டி மலர் கண்காட்சி 15-ந்தேதி தொடங்குகிறது

இ-பாஸ் நடைமுறையால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.
ஊட்டி மலர் கண்காட்சி 15-ந்தேதி தொடங்குகிறது
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி(சனிக்கிழமை) கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை முதல் 11-ந் தேதி வரை ரோஜா கண்காட்சியும், கூடலூரில் நாளை முதல் 11-ந் தேதி வரை வாசனை திரவிய கண்காட்சியும் நடக்கிறது.

23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சியும், முதல் முறையாக 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சியும் நடக்க உள்ளது.

கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 6 நாட்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி ஒருநாள் முன்னதாகவே அதாவது வருகிற 15-ந் தேதி(வியாழக்கிழமை) தொடங்க உள்ளதாகவும், 6 நாள் நடத்த திட்டமிட்ட இருந்த நிலையில் கண்காட்சி தற்போது 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதவாது:-

இ-பாஸ் நடைமுறையால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்ட மலர் கண்காட்சி தற்போது 10 நாட்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு 12 மீட்டர் அதிகமுள்ள சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com