என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நான் உயிரோடு தான் இருக்கிறேன் - யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா
- ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக நித்யானந்தா தகவல்
- Youtube Live கமென்ட் ஒன்றை நித்யானந்தா படித்து காட்டினார்
பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார்.
அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார். ஆனால் இல்லாத நாட்டுக்கு அவர் பெயர் சூட்டுவதாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இது தொடர்பாக நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேசஸ்வரன் நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் பிரசங்கம் செய்தார். அப்போது இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் சமாதி அடைந்து விட்டதாக அறிவித்தார். இது நித்யானந்தாவின் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நித்யானந்தா நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார், நித்யானந்தா இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று அதிகாலை யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா பேசியவை:-
இன்று, ஏப்ரல் 3, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுதான் உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்
பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். ஆனாலும் அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்"
மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன்"
என்று தெரிவித்தார்.
மேலும், இது தான் நேரலையில் தான் பேசுகிறேன் என காட்டுவதற்கு Youtube Live கமென்ட் ஒன்றை நித்யானந்தா படித்து காட்டினார்






