என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தம்பிதுரை எம்.பி. பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு | #Thambidurai
    X

    தம்பிதுரை எம்.பி. பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு | #Thambidurai

    • சுமார் 2,476 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு.
    • மனுவை விசாரித்த நீதிமன்றம் திருவள்ளூர் கலெக்டருக்கு உத்தரவிட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணாம்பேடு, நாராயணபுரம் போன்ற கிராமங்களில், அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பங்களை சேர்ந்தவர்களும், பள்ளி மற்றும் கல்லுாரிகளை கட்டி உள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி நிறுவனம், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளிகள், பொறியியல் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலை உள்ளன. அதிமுக, எம்.பி, தம்பிதுரையின் குடும்ப உறுப்பினர்கள், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

    வருவாய் ஆவணங்களில் நீர்ப்பிடிப்பு, கல்லாங்குத்து என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, மாணவ- மாணவியருக்கான கல்லுாரி விடுதிகள், பயிலகம், துணைமின் நிலையம், கல்லுாரி பஸ்களை நிறுத்த தனி சாலை போன்றவற்றை அமைத்து உள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு முதல், பொது நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் நிலங்களை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு கிராம பொது நல சங்க தலைவர் ஜி. கருணாநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 2,476 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×