என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,591 கன அடியாக சரிந்தது
- அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அணை நீர்மட்டம் 118.80 அடியாகவும், நீர் இருப்பு 91.56 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,769 கன அடியிலிருந்து 7,591 கன அடியாக சரிந்துள்ளது. அணை நீர்மட்டம் 118.80 அடியாகவும், நீர் இருப்பு 91.56 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதுபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
Next Story






