என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... வானிலை ஆய்வு மையம் தகவல்
- தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
- 20 மற்றும் 21-ந்தேதிகளில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
20 மற்றும் 21-ந்தேதிகளில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.






