என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களே 2 நாட்கள் உஷார்... வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்
    X

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களே 2 நாட்கள் உஷார்... வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

    • தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 22-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.
    • தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும்.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை யொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இன்று காலை முதல் நகர்ந்து வருகிறது.

    இதன் காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த 2 நாட்களும் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 22-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

    வருகிற 22, 23-ந் தேதிகளில் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வருகிற 23-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அதற்கு அடுத்த நாள் 24-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×