என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம்
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
- தாழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
தெற்கு கொங்கன்- கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 36 மணி நேரத்தில் (நாளை மாலை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கேரளாவில் ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. தாழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






