என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!
    X

    குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

    • பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ் தகுதித்தேர்வு, 22ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும்
    • காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1270

    தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியானது. இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ் தகுதித்தேர்வு, 22ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/ காணலாம். 645 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பின்பு கூடுதலாக, 625 இடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் குரூப் 2,2ஏ பதவிகளுக்கான மொத்தம் எண்ணிக்கை என்பது 1270 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×