என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றம்
- திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது.
- தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து ஒரு பெரும் அரசியலே நிகழ்த்தப்பட்டு வருகிறது.
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றப்பட்டது.
மாட்டு வண்டியில் கொடிமரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் வழிபாடு செய்யப்பட்டு கள்ளத்தி மரம் பகுதியில் கொடியேற்றப்பட்டது
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து ஒரு பெரும் அரசியலே தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் நேற்று கொடியேற்றப்பட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.






