என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்
- நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- ரெயில் நிலையங்களிலும் மெட்ரோ ரெயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மெட்ரோ ரெயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் புகார்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.
நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை, விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ரெயில் நிலையங்களிலும் மெட்ரோ ரெயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






