என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

1 லட்சம் பிரசவங்கள்... புகழ்பெற்ற 5 ரூபாய் மருத்துவரின் மனைவி மாரடைப்பால் உயிரிழப்பு
- அதிகபட்சமாக அவர் 5 ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளார்.
- மருத்துவர் ஜெயச்சந்திரன் இறந்த பிறகு அவரது மனைவி வேணி 5 ரூபாய் சிகிச்சையை தொடர்ந்து வந்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் பல ஆண்டுகளாக ஐந்து ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தவர் மருத்துவர் ஜெயச்சந்திரன். வண்ணாரப்பேட்டையில் மருத்துவர் ஜெயச்சந்திரன் என்றால் பலருக்கும் தெரிவது கடினம்தான். ஆனால் ஐந்து ரூபாய் டாக்டர் என்றால் அனைவரும் அவரது வீட்டுக்கு வழிகாட்டுவார்கள். அந்த அளவு அந்தப் பகுதியில் பிரபலமானவர் இந்த ஐந்து ரூபாய் டாக்டர்.
கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவரான ஜெயச்சந்திரன் 1972-ம் ஆண்டு முதல் கிளினிக்கை தொடங்கி அதில் கட்டணமாக 2 ரூபாய் பெற்று வந்தார். அதிகபட்சமாக அவர் 5 ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாரடைப்பால் மருத்துவர் ஜெயச்சந்திரன் காலமானார்.
மருத்துவர் ஜெயச்சந்திரன் இறந்த பிறகு அவரது மனைவி வேணி 5 ரூபாய் சிகிச்சையை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில், மறைந்த ஜெயச்சந்திரனின் மனைவி வேணி (71) மாரடைப்பால் உயிரிழந்தார். 1 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களை பார்த்துள்ள வேணி கணவரின் சேவையை தொடர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






