என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண்களிடம் தவறாக பேசினேனா? வைரல் ScreenShot-க்கு ராஜீவ் காந்தி விளக்கம்
    X

    பெண்களிடம் தவறாக பேசினேனா? வைரல் ScreenShot-க்கு ராஜீவ் காந்தி விளக்கம்

    • நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை.
    • யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம்.

    தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி பதவி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் பெண்களிடம் தவறாக பேசியதாக வெளியான குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ராஜீவ் காந்தி அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் மாற்றுக் கருத்து இருப்பின் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால், என்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பொய் செய்தியை 10 டாலர் கிரிப்டோ செலுத்தி உருவாக்கும் அளவிற்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?

    தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு தானே தவிர அழிவிற்கு அல்ல

    யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வந்து கொலை கூட செய்யுங்கள்.

    பொய்யான குற்றச்சாட்டுகளை வாரி வீசி வீழ்ந்த நினைப்பது அதைவிட கொடூரமானது

    இதை எல்லாம் வைத்து யார் பேசிய மாதிரியும் உருவாக்கலாம்.

    நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை.

    யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம்.

    இந்த அவதூறு என்னை வீழ்த்தாது தொடர்ந்து ஒலிக்கும் என் பெருங்குரல்.

    இதோ போலியாக உருவாக்கும் தளம்:

    https://fakedetail.com/fake-instagram-chat-generator

    இதில் வருவதையும் பரவும் screenshot- ஐயும் பாருங்கள். அப்படியே வரும்.

    இவ்வாறு ராஜீவ் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×