என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"டிட்வா" புயலின் வேகம் குறைந்தது- சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவில் மையம்
- புதுவை கடற்கரை பகுதியில் வடக்கு நோக்கி நகர வாய்ப்பு.
- வேதாரண்யத்தில் இருந்து 150 கி.மீ தொலைவில் மையம்.
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 7 கி.மீ வேகத்தில நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் வேகம் 6 மணிநேரத்தில் 7 கி.மீ ஆக குறைந்து நகர்ந்து வருகிறது.
டிட்வா புயல் 24 மணிநேரத்தில் வடதமிழ்நாடு, புதுவை கடற்கரை பகுதியில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் வடக்கு நோக்கி நகரும்போது தமிழ்நாடு- புதுவை கடற்கரையில் குறைந்தது 30 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
வேதாரண்யத்தில் இருந்து 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூருக்கு 100, காரைக்காலுக்கு 110, புதுவைக்கு 100, புதுவைக்கு 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.






