தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு

கேரள மாநில போக்குவரத்துத்துறை ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடித்தது.அண்டை மாநிலங்கள் சாலை வரி விதிப்போம் எனக் கூறுவதால் நடவடிக்கை.
தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு
Published on

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமார் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத்துறை சிறைப்பிடித்து 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கங்கள் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி விதிப்போம் என கேரள மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சாலை வரி விதிப்போம் என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் நாளை மாலை முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com