search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆத்தூர் கிளை சிறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு
    X

    ஆத்தூர் கிளை சிறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு

    • சிறையில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை உள்ளது.

    இங்கு 200 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. நேற்று வரை 34 விசாரணை கைதிகள், 4 தடுப்பு காவல் கைதிகள் என மொத்தம் 38 பேர் உள்ளனர் .

    நேற்று சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையிலான போலீசார் மாவட்ட சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது சிறையில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    கைதிகளுக்கு உணவு வழங்குதல், உணவு தரம், உணவு பட்டியல் குறித்து கேட்டறிந்தனர். சிறையில் அடைத்து வைத்துள்ள கைதிகளின் பாதுகாப்பு, குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதுகுறித்து சிறை போலீசார் கூறுகையில், சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தனர். சமீபத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமரா செயல்பாடுகள், பாதுகாப்பு, எந்த வகை உணவு வழங்கப்படுகிறது என்பது தொடர்பாகவும் இந்த ஆய்வு நடந்தது என கூறினர்.

    Next Story
    ×