என் மலர்

  தமிழ்நாடு

  ஆயுதபூஜை விடுமுறை- பார்வையாளர்கள் வருகைக்காக வண்டலூர் பூங்கா நாளை திறப்பு
  X

  ஆயுதபூஜை விடுமுறை- பார்வையாளர்கள் வருகைக்காக வண்டலூர் பூங்கா நாளை திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
  • வண்டலூர் பூங்காவுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாள்.

  வண்டலூர்:

  வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக திறக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

  வண்டலூர் பூங்காவுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கி ழமை விடுமுறை நாள் ஆகும். நாளை (4-ந்தேதி) ஆயுத பூஜை விடுமுறை நாள் என்பதால் பெரும்பாலானோர் சுற்றுலா தலங்களுக்கு அதிகஅளவில் குடும்பத்துடன் செல்வது வழக்கம்.

  எனவே விடுமுறை நாளான நாளை பார்வையாளர்கள் வருகைக்காக வண்டலூர் பூங்காவை திறக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

  இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஆயுத பூஜை விடுமுறை நாளான நாளை பார்வையாளர்கள் வருகைக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நாளை வண்டலூர் பூங்காவில் வழக்கத்தை விட கூடுதலாக பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×