என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
போக்குவரத்து விதிமீறல்- 15 நாட்களில் ரூ.1.88 கோடி அபராதம் விதிப்பு
- போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
- சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னையில் திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி தற்போது விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
அதன்படி சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் 12 ஆயிரத்து 625 வழக்குகளில் அபராத தொகை ரூ.70 லட்சத்து 46 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாததற்காக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.42 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.