என் மலர்
தமிழ்நாடு
காக்கி சீருடை அணியாததற்கு ரூ.500 அபராதம் விதித்ததால் போலீசாரிடம் கெஞ்சிய லாரி டிரைவர்
- எண்ணூர் விரைவு சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- அபராதமாக கட்டி விட்டால் குடும்பம் நடத்த என்ன செய்வேன் என்று டிரைவர் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினார்.
சென்னை:
சென்னை எண்ணூர் விரைவு சாலையில் மணலி சி.பி.சி.எல். சந்திப்பு வளைவு பகுதி அருகில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது லாரி டிரைவர் ஒருவரை அழைத்தார். அவர் காக்கி சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். எதற்காக சீருடை அணியவில்லை என்று கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தார்.
அதற்கு லாரி டிரைவர் என்னால் 500 ரூபாய் அபராதம் கட்ட இயலாது. இரவு முழுக்க கண் விழித்து லாரி ஓட்டினால் தான் என்னால் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும். அதையும் அபராதமாக கட்டி விட்டால் குடும்பம் நடத்த என்ன செய்வேன் என்று இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினார்.
அதற்கு அவர் விடாபிடியாக அபராதம் விதித்து நீ கட்டாவிட்டால் உன் லாரி உரிமையாரை கட்ட சொல் என்றார். அதற்கு லாரி டிரைவர் விழி பிதுங்கியபடி அவர் கட்டமாட்டார். எனது ஒருநாள் உழைப்பு வீணாகி விட்டதே என்று கண்ணீர் விட்டு புலம்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.