search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
    X

    குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

    • நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
    • ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும்.

    இந்த ஆண்டு தாமதமாக சீசன் தொடங்கினாலும், அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    நேற்று காலை முதல் குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்ததன் காரணமாக மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.

    மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஒட்டிய பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இன்று காலையில் ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இதமான குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருவதால் குற்றாலத்தில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது.

    Next Story
    ×