என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் கருப்பு கொடியுடன் நாளை மறியல் போராட்டம்

- விவசாயிகள் ஆகியோர் கடந்த 424 நாட்களாக அறவழியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
- ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் கடந்த 424 நாட்களாக அறவழியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பொதுமக்களின் போராட்டத்தையும் மீறி, நீர்நிலைகளை மட்டுமே அளக்கிறோம் என்று கூறி அதிகாரிகள் ஒட்டுமொத்த விமான நிலைய திட்டத்தை குறிக்கும் வரைபடத்தை மார்க் செய்து உள்ளனர். போராட்டம் நடத்தும் மக்களிடம் முறையான அறிவிப்பு ஏதும் செய்யாமல் விமான நிலைய திட்ட வரைபடத்தை வரைந்தது யார் என்ற கேள்விக்கு இதுவரை மாவட்ட நிர்வாகத்தால் பதில் அளிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நீர்நிலைகளை ஆய்வு செய்ய பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான வல்லுநர்களை கொண்ட உயர்மட்ட குழு வருகிற 26-ந்தேதி பரந்தூருக்கு வருகிறது. இந்த குழுவினருடன் விமான நிலைய திட்டத்திற்காக நிலங்களை ஒப்படைக்க கூடிய டிட்கோவின் இயக்குனரும் வருவதால், இந்த குழு வருவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், டாக்டர் அம்பேத்கார் சிலை அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கருப்பு கொடியுடன் சாலைமறியல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.இந்த போராட்டத்துக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.