search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லிம்கா சாதனை புத்தகத்தில் திருப்பூர் மாணவரின் சுவர் ஓவியம்
    X
    மாணவர் சஞ்சய்குமார் வரைந்த சுவர் ஓவியம்.

    லிம்கா சாதனை புத்தகத்தில் திருப்பூர் மாணவரின் சுவர் ஓவியம்

    • மாணவரின் சுவர் ஓவியத்தை கல்லூரி நிர்வாகம் லிம்கா சாதனை புத்தக குழுவுக்கு அனுப்பி வைத்தது.
    • தற்போது மாணவர் சஞ்சயின் ஓவியத்தை மிகப்பெரிய சுவர் ஓவியமாக அங்கீகரித்துள்ளது லிம்கா.

    திருப்பூர்:

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் - டீ கல்லூரியில் காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பேஷன் துறையில் படிக்கும் மாணவர் சஞ்சய்குமார். இவர் கடந்த 2020 ஜூன் மாதம் தொடர்ந்து 25 நாட்கள் முயற்சி செய்து 504 சதுர அடியில் அப்ஸ்ட்ராக்ட் பெயின்டிங் எனப்படும் புதிர் ஓவியம் தீட்டினார். பிரபல ஓவியர்கள் ரவிவர்மா, பிக்காசோ, உலக வரைபடம், பிரபல இசை வல்லுனர் பீட்டோ உருவம் பொறித்த ஆக்டோபஸ், பேஷன் துறை முன்னோடியான அலெக்சாண்டர் மெக்குயின் படங்களை சுவரில் தத்ரூப ஓவியமாக வரைந்தார்.

    மாணவரின் இந்த சுவர் ஓவியத்தை கல்லூரி நிர்வாகம் லிம்கா சாதனை புத்தக குழுவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது மாணவர் சஞ்சயின் ஓவியத்தை மிகப்பெரிய சுவர் ஓவியமாக அங்கீகரித்துள்ளது லிம்கா. மேலும் இந்த ஓவியம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் லிம்கா தரப்பில் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சாதனை ஓவியம் தீட்டிய மாணவரை நிப்ட் -டீ கல்லூரி தலைவர் மோகன், முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம், இணை செயலாளர்கள் விஜயகுமார், சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் பாராட்டினர்.

    Next Story
    ×