search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு- கன்னியாகுமரியில் பிடிபட்ட புலிக்கு வண்டலூர் பூங்காவில் சிகிச்சை
    X

    ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு- கன்னியாகுமரியில் பிடிபட்ட புலிக்கு வண்டலூர் பூங்காவில் சிகிச்சை

    • சோர்வாக காணப்பட்ட புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள்.

    வண்டலூர்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிற்றாறு சிலோன் காலனியில் புலி ஒன்று ஆடுகள், நாய்களை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தியது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அந்த புலியை பேச்சிப்பாறை கல்லறை வயல் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 13 வயதுடைய அந்த ஆண் புலி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 10-ந்தேதி கொண்டுவரப்பட்டது.

    சோர்வாக காணப்பட்ட புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது அந்த புலி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புலிக்கு உணவாக இறைச்சிகள் வழங்கப்படுகின்றன.

    இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது, கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட புலிக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து முழு கண்காணிப்பில் உள்ளது. மேலும் அதற்கான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த ஆண் புலி பூரண குணமடைந்து விடும். அதற்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள். பின்னர் அந்த புலி பார்வையாளர்கள் காண்பதற்காக விடப்படும் என்றார்.

    Next Story
    ×