search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் விஜயாபுரம் அரசு பள்ளியில் கம்பிவேலி கல் சாய்ந்ததில் 3 மாணவிகள் காயம்
    X

    திருப்பூர் விஜயாபுரம் அரசு பள்ளியில் கம்பிவேலி கல் சாய்ந்ததில் 3 மாணவிகள் காயம்

    • இன்று காலை சமுதாய நலக்கூடத்தில் இருந்து 4-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் துவக்க பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
    • மாணவ-மாணவிகள் வரிசையாக நடந்து வந்தபோது சமுதாய கூடத்தின் சுற்றுப்புற முன் பகுதியில் உள்ள வேலி கம்பியில் ஒரு மாணவியின் உடை சிக்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் நல்லூர் அடுத்த விஜயாபுரம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 600 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். போதிய அளவிற்கு வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால், 3 மற்றும் 4-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை பள்ளியின் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமர்த்தி வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை சமுதாய நலக்கூடத்தில் இருந்து 4-ம்வகுப்பு மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் துவக்க பள்ளிக்கு அழைத்து வந்தனர். மாணவ-மாணவிகள் வரிசையாக நடந்து வந்தபோது சமுதாய கூடத்தின் சுற்றுப்புற முன் பகுதியில் உள்ள வேலி கம்பியில் ஒரு மாணவியின் உடை சிக்கியது. அது தெரியாமல் அந்த மாணவி வேகமாக நடக்க முற்பட்டபோது கம்பிவேலியின் கல்லானது கீழே சாய்ந்தது. இதில் 4ம் வகுப்பு பயிலும் ஜெபராணி(வயது 9), மகிழ்ந்தி (9), கவிமலர்(9) ஆகிய 3 மாணவிகளுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடியாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்த மாணவிகளை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×