என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்
    X

    கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை படத்தில் காணலாம்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

    • மகிழ்ச்சி அடைந்த அசைவ பிரியர்கள் அதிகாலை முதல் வியாபாரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
    • 61 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட மீன்களின் விலை இன்று சிறிது குறைந்து காணப்பட்டதால் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமுலில் இருந்தது.

    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 14 ந்தேதி முதல் ஜூன் 15 ந்தேதி வரை 61 நாட்களாக மீன்பிடித்தடைக் காலம் இருந்து வந்தது. இந்நிலையில் தடைக்காலம் முடிந்து 15-ந்தேதி மீனவர்கள் ஆர்வமுடன் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. தடைக்காலத்தில் சிறிய வகை படகுகள் மட்டுமே சென்று மீன்களைப் பிடித்து வந்த நிலையில் இருந்தபோது குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாக மீன்கள் கடந்த 61 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் மீன்விலை உயர்ந்து காணப்பட்டதால் அசைவ பிரியர்கள் இறைச்சியை அதிகளவில் வாங்கி சென்றனர்.

    இந்நிலையில் அனைத்து வகையான படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்த நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை அதிக அளவிலான மீன்கள் கடலூர் மீன்பிடித் துறைமுகத்திற்கு விற்பனைக்காக வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அசைவ பிரியர்கள் அதிகாலை முதல் வியாபாரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர். கடந்த 61 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட மீன்களின் விலை இன்று சிறிது குறைந்து காணப்பட்டதால் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர்.

    இந்நிலையில் மீன்பிடி தடைகாலத்தின் போது 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சரம் மீன் 800 ரூபாய்க்கும், 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட வவ்வால் மீன் 600 ரூபாய்க்கும், 450 ரூபாய்க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் 300 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனவா மீன் 200 ரூபாய்க்கும் விற்பனையானது. இதே போல் ஒரு கிலோ இறால் 450 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 250 ரூபாயாக குறைந்து விற்பனையானது. இதன் காரணமாக கடலூர் துறைமுகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×