search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது

    • சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • சுங்க கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் 50 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் சாலையில் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் உயர்த்தப்படும். கடந்த ஏப்ரல் 1-ந்தேதி தமிழகத்தில் உள்ள 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதையடுத்து மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    சுங்கச்சாவடிகளில் சேவை வழங்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இந்த கட்டண உயர்வு அவசியமானது என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

    சுங்கச்சாவடி எல்லைக்குட்பட்ட சாலைகள் சேதம் அடைந்தாலும், சேதம் அடையாவிட்டாலும் அதை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அதற்கே 40 சதவீதம் தொகை செலவிடப்படும். அதுபோக சாலையின் நடுப்பகுதியில் பெயிண்ட் அடிக்க வேண்டும். சாலையில் ஒளிரும் பட்டை பதிக்க வேண்டும்.

    மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். ஆண்டுதோறும் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இந்த செலவுகள் தவிர சர்வீஸ் சாலைகள், நகர்ப்புற விரிவு பகுதிகள், பாலங்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் உள்ள தெரு விளக்குகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே சுங்கச் சாவடிகளில் ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுங்க கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் சுங்கச்சாவடிகளை அகற்றி ஜி.பி. எஸ். அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருவதாகவும், 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×