என் மலர்
தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து போலீசார் 280 பேருக்கு யோகா பயிற்சி
- நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துணை கமிஷனர் சமய் சிங் தலைமை தாங்கினார்.
- பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்பேரில் போலீசாருக்கு அது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் போக்குவரத்து போலீசார் 280 பேருக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
வேப்பேரி அழகப்பா பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துணை கமிஷனர் சமய் சிங் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர்கள் கிறிஸ்டோபர், ரவி, சிவக்குமார் மற்றும் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story